கும்ப லக்ன பாதகாதிபதி;
கும்ப லக்னத்திற்க்கு சுக்கிரன் பாதக பாக்கிய வீடு வாகன அதிபதி
இவர் பாதக ஆதிபத்தியம் பெற்று லக்னாதிபதிக்கு நண்பன் ஆவதால் தனித்து ஆட்சி உச்சம் பெறாமல் இருக்க நலம்,
* லக்னத்தில் கேந்திர பலத்தில் தனித்து இல்லாமல் இருக்க நலம், தனித்த சுக்கிரன் சில யோகங்களை கொடுத்து பல சங்கடங்களையும் தருவார், மற்ற கிரக சேர்க்கை பாதக பலன் குறைவு , சனி, புதன் சேர்க்கை மிகுந்த யோகம், சில பாதிப்பையும் தருவார் சுக்கிரன் ,
* இரண்டில் சுக்கிரன் உச்ச பெற்று தன் பாதக வீட்டிற்க்கு மறைவது சில அதிஷ்ட வாய்ப்புகளை இழந்தாலும், பாதகம் மிக குறைவே, உச்சம் பெற்ற கிரகம் தன் மூலத்திரிகோண விட்டை பலமிழக்க செய்யும் என்ற விதிப்படியும், உச்ச சுக்கிரன் வீடு, தனம், குடும்பம், கல்வி, மனைவி, வாகனம், தாய் , சுகம், பூமி யோகத்தை அதிகம் தரும், இதில் கேது சேராமல் இருக்க நலம்,
* மூன்றில் பகை பெறும் சுக்கிரன் பாதக இடத்தை பார்ப்பதாலும், தன் சுக வீட்டிற்க்கு மறைவதால் பாக்கியங்களாக வந்த வீடு, வாகனம், நிலம், இவற்றை கொடுத்து கெடுக்கும் , சொந்த வீடு அமைய தடை ஏற்படலாம்,
*நான்கில் ஆட்சி பெற்று சுக்கிரன் அமைந்து திக் பலம் அடைவதால் பாதக இடத்திற்கு மறைவதால் மிகுந்த யோகம், இருந்தும் ஆட்சி, திக் பலம் அடைவதால் வாகன பாதிப்பு ஏற்பட்டு விலகும்,
தந்தையை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றாலும் பயன் அற்ற தன்மையை தருகிறது , செவ்வாய் சேர சுயதொழில், மாளிகை போன்ற வீடு அமையும் ,
* ஐந்தில் புதனுடன் சேர யோகமே மிகும், தனித்த சுக்கிரனும் பெறும் பாதிப்பை தருவதில்லை ,
* ஆறில் சந்திரன் வீட்டில் பகையுடன் சுக்கிரன் அமைவது வீண் செலவுகளை அதிகம் தருகிறது ,
*ஏழில் தனித்த சுக்கிரன் திருமணம் அமையாமல் இருப்பது அல்லது தாமத திருமணம் , திருமண முறிவை தரலாம்,
* எட்டில் சுக்கிரன் நீசமடைவது எந்த விதத்திலும் நன்மை இல்லை, நீசபங்கம் அடைய சற்று தாமத யோகம்,
* ஒன்பதில் எந்த கிரக பார்வை, சேர்க்கை இல்லாமல் தனித்த சுக்கிரன் யோகங்களை வாரிவழங்கி அனைத்தும் பிடிங்கிடுவார், சேர்க்கை கெடுபலனை குறைக்கும் ,
* பத்தில் சுக்கிரன் அமைவதும் யோகமும், பாதகமும் சேர்ந்தே இருக்கும் , செவ்வாய் சேர சிறப்பான யோக பலனே,
* 11ல் அமைவது வீடு, வாகன, நில யோகத்தை கொடுத்து அல்லது இருந்ததும் அதை அனுபவிக்க முடியாத நிலையை தருகிறது , பாதகம் குறைவே,
* 12ல் மறைவது சொந்த வீடு, வாகன, சுகத்தை தராது, எளிய வீடு அல்லது வாடகை வீட்டிலே கடைசி வரை வாழ வைத்து விடும்,
பொதுவாக சுக்கிரன் தனித்து இல்லாமலும், ராகு, கேது, சூரியனுடன் நெருங்கிய நிலையில் இல்லாமல் இருக்க சிறப்பே, இவை பாதகாதிபதியை மட்டுமே வைத்து பொதுபலன், ஒரு புரிந்துணர்வுக்காக மட்டுமே , விதிவிலக்குகள் பல உண்டு
ஜோதிட சந்தேகம் மட்டுமே பதில் அளிப்பேன், தனிப்பட்ட ஜாதகத்திற்க்கு முகநூலில் பலன் தர நேரமில்லை, தட்சனை செலுத்தி ஆலோசனை பெறலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக