ஞாயிறு, 8 ஜனவரி, 2023

உங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி?

 உங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி?

அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடாது. ஒன்று எளிதாக கிடைத்தால் மற்றொன்று கிடைக்க தாமதம் அல்லது கிடைக்காமலே போகும்.
இதையே முடக்கம் என்கிறோம்
முடக்கு நட்சத்திரம் எப்படி அறியலாம்?
உங்கள் ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கொள்ள வேண்டும்
எத்தனை நட்சத்திரம் உள்ளதோ அந்த எண்ணிக்கையை பூராடம் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் ஆகும்.
முடக்கு நட்சத்திரம் நின்ற ராசி முடக்கு ராசி ஆகும்.
உதாரணம்:
விருச்சிக ராசியில்
கேட்டை நட்சத்திரத்தில் ஒருவருக்கு சூரியன் இருந்தால்
கேட்டை நட்சத்திரத்திலிருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணினால்
வரும் விடை 2
பூராட நட்சத்திரத்திலிருந்து 2 நட்சத்திரம் வரை எண்ணினால்
உத்திராம் வரும் .
ஆகவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு உத்திராடம் முடக்கு நட்சத்திரம் ஆகும்
முடக்கு ராசி எது?
(உத்திராடம் 1ம் பாதம் தனுசுவிலும்
2,3,4 பாதங்கள் மகரத்திலும் வருவதால்)
சூரியன் 1ஆம் பாதத்தில் இருந்தால் தனுசு ராசி முடக்கு ராசி.
முடக்கு ராசி தனுசு
முடக்கு ராசி அதிபதி குரு
முடக்கு நட்சத்திரம் உத்திராடம்
முடக்கு நட்சத்திராதிபதி சூரியன்
சூரியன் 2,3,4பாதங்களில் ஏதேனும்
ஒரு பாதங்களில் நின்றால்
முடக்கு ராசி மகரம்
முடக்கு ராசி அதிபதி சனி
முடக்கு நட்சத்திரம் உத்திராடம்
முடக்கு நட்சத்திர அதிபதி சூரியன்.
முடக்கு ராசி எப்படி பாதிக்கும்?
உதாரணத்திற்கு கன்னி லக்கனத்தில் பிறந்தோருக்கு
தனுசு முடக்கு ராசியாக இருந்தால்
தனுசுவில் நின்ற கிரகம் சரிவர இயங்காது.
ஜனன ஜாதகத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம் சரிவர இயங்காது.
தனுசு ராசி அதிபதியான குரு நின்ற பாவகம் நல்ல முறையில் இயங்காது.
கன்னி லக்னத்திற்கு முடக்கு ராசி அதிபதி குரு நான்கிற்கும், ஏழிற்கும் அதிபதியாக இருப்பதால்
வீடு,மனை,வாகனம்,தாயார்,தனது ஆரோக்கியம் போன்ற காரகத்துவங்களில் தடங்கல் வரும்.
மனைவி,நண்பர்கள்,பங்குதாரர்கள் போன்றவரிடம் இணக்கமான சூழ்நிலை இருக்காது.
எப்போது முடக்கம் வரும்?
முடக்கு நட்சத்திரத்தில் நின்று ஒரு கிரகம் தசாவோ,புத்தியோ நடைபெறும் போதும்,
முடக்கு ராசியில் ஏதேனும் ஒரு கிரகம் நின்று நடைபெறும் கிரக தசா அல்லது புத்திலும்
முடக்கு ராசி அதிபதி தசா அல்லது புத்தி நடக்கும்
அத்தகைய கால கட்டங்களில் இந்த முடக்கம் உருவாகும்.
முடக்கு ராசியே லக்கனமாக அமைந்து லக்னத்தில் ராகு அல்லது கேது நின்று
அதன் திசை நடைபெற்றால் தசா காலம் முழுவதும் முடங்கி மிகுந்த துன்பத்துக்கு உள்ளாவார்கள்.
பரிகாரம்
முடக்கு நட்சத்திரத்திற்கு உரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது.
அன்னதானம் செய்வது.
நட்சத்திற்கு உரிய மரம் நட்டு பாராமரிப்பது.
முடக்கு ராசி அதிபதியின் கோவிலுக்கு சென்று வழிபடுவது.
ராசி அதிபதிக்கு உரிய பொருட்களை அன்னதானம் செய்வது.
வாழ்க வளமுடன்

சுக்கிரன் அஸ்தங்கம், நீசம், வக்ரம், பரிவர்த்தனை பெற்றவர்களின் திருமண பிரச்சினைக்கு பெரிதும்

 சுக்கிரன் அஸ்தங்கம், நீசம், வக்ரம், பரிவர்த்தனை பெற்றவர்களின் திருமண பிரச்சினைக்கு பெரிதும்

காரணமாக இருப்பது வீடேதான்,

வீட்டின் மூலம் ஏதாவது ஒரு பிரச்சினை , சிக்கல் இருக்கும் அதே காரணம் பிரிவினை வரை கொண்டு செல்கிறது,

கமென்டில் ஜாதகம் அனுப்பி பலன் கேட்க வேண்டாம், ஜோதிட பொது கேள்விகள் கேளுங்கள் , ஓய்வு நேரத்தில் பதில் அளிக்கிறேன்,

கும்ப லக்ன பாதகாதிபதி

 கும்ப லக்ன பாதகாதிபதி;


கும்ப லக்னத்திற்க்கு சுக்கிரன் பாதக பாக்கிய வீடு வாகன அதிபதி
இவர் பாதக ஆதிபத்தியம் பெற்று லக்னாதிபதிக்கு நண்பன் ஆவதால் தனித்து ஆட்சி உச்சம் பெறாமல் இருக்க நலம்,
* லக்னத்தில் கேந்திர பலத்தில் தனித்து இல்லாமல் இருக்க நலம், தனித்த சுக்கிரன் சில யோகங்களை கொடுத்து பல சங்கடங்களையும் தருவார், மற்ற கிரக சேர்க்கை பாதக பலன் குறைவு , சனி, புதன் சேர்க்கை மிகுந்த யோகம், சில பாதிப்பையும் தருவார் சுக்கிரன் ,
* இரண்டில் சுக்கிரன் உச்ச பெற்று தன் பாதக வீட்டிற்க்கு மறைவது சில அதிஷ்ட வாய்ப்புகளை இழந்தாலும், பாதகம் மிக குறைவே, உச்சம் பெற்ற கிரகம் தன் மூலத்திரிகோண விட்டை பலமிழக்க செய்யும் என்ற விதிப்படியும், உச்ச சுக்கிரன் வீடு, தனம், குடும்பம், கல்வி, மனைவி, வாகனம், தாய் , சுகம், பூமி யோகத்தை அதிகம் தரும், இதில் கேது சேராமல் இருக்க நலம்,
* மூன்றில் பகை பெறும் சுக்கிரன் பாதக இடத்தை பார்ப்பதாலும், தன் சுக வீட்டிற்க்கு மறைவதால் பாக்கியங்களாக வந்த வீடு, வாகனம், நிலம், இவற்றை கொடுத்து கெடுக்கும் , சொந்த வீடு அமைய தடை ஏற்படலாம்,
*நான்கில் ஆட்சி பெற்று சுக்கிரன் அமைந்து திக் பலம் அடைவதால் பாதக இடத்திற்கு மறைவதால் மிகுந்த யோகம், இருந்தும் ஆட்சி, திக் பலம் அடைவதால் வாகன பாதிப்பு ஏற்பட்டு விலகும்,
தந்தையை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றாலும் பயன் அற்ற தன்மையை தருகிறது , செவ்வாய் சேர சுயதொழில், மாளிகை போன்ற வீடு அமையும் ,
* ஐந்தில் புதனுடன் சேர யோகமே மிகும், தனித்த சுக்கிரனும் பெறும் பாதிப்பை தருவதில்லை ,
* ஆறில் சந்திரன் வீட்டில் பகையுடன் சுக்கிரன் அமைவது வீண் செலவுகளை அதிகம் தருகிறது ,
*ஏழில் தனித்த சுக்கிரன் திருமணம் அமையாமல் இருப்பது அல்லது தாமத திருமணம் , திருமண முறிவை தரலாம்,
* எட்டில் சுக்கிரன் நீசமடைவது எந்த விதத்திலும் நன்மை இல்லை, நீசபங்கம் அடைய சற்று தாமத யோகம்,
* ஒன்பதில் எந்த கிரக பார்வை, சேர்க்கை இல்லாமல் தனித்த சுக்கிரன் யோகங்களை வாரிவழங்கி அனைத்தும் பிடிங்கிடுவார், சேர்க்கை கெடுபலனை குறைக்கும் ,
* பத்தில் சுக்கிரன் அமைவதும் யோகமும், பாதகமும் சேர்ந்தே இருக்கும் , செவ்வாய் சேர சிறப்பான யோக பலனே,
* 11ல் அமைவது வீடு, வாகன, நில யோகத்தை கொடுத்து அல்லது இருந்ததும் அதை அனுபவிக்க முடியாத நிலையை தருகிறது , பாதகம் குறைவே,
* 12ல் மறைவது சொந்த வீடு, வாகன, சுகத்தை தராது, எளிய வீடு அல்லது வாடகை வீட்டிலே கடைசி வரை வாழ வைத்து விடும்,
பொதுவாக சுக்கிரன் தனித்து இல்லாமலும், ராகு, கேது, சூரியனுடன் நெருங்கிய நிலையில் இல்லாமல் இருக்க சிறப்பே, இவை பாதகாதிபதியை மட்டுமே வைத்து பொதுபலன், ஒரு புரிந்துணர்வுக்காக மட்டுமே , விதிவிலக்குகள் பல உண்டு

ஜோதிட சந்தேகம் மட்டுமே பதில் அளிப்பேன், தனிப்பட்ட ஜாதகத்திற்க்கு முகநூலில் பலன் தர நேரமில்லை, தட்சனை செலுத்தி ஆலோசனை பெறலாம் 




முடக்கு நட்சத்திர

 முடக்கு நட்சத்திர முதல் பாதம் இருக்கும் ராசியே முடக்கு பாவகம்,

லக்னம் முடக்கு பாவகமாக அமைந்து அதில் ராகு, கேது இருந்தால் வாழ்க்கையே முடக்கமானது போல் இருக்கிறது ,

இவர்களுக்கு முதலில் லக்னத்தில் அமைந்த ராகு, கேது அதன் தசை இளமையில் வர இளம்பிள்ளை வாதம் போன்ற பாதிப்பு வருகிறது ,
அடுத்தடுத்து படிப்பு அமைந்தால் சரியான வேலை இல்லை , திருமணம் அமைந்தால் வாழ்க்கை துனையுடன் கருத்துவேறுபாடு என ஏதோ ஒன்றை வாழ்வின் இறுதி வரை தருகிறது ,

இவர்கள் மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் ஆலயம் சென்று வேண்டி வழிபட மாற்றம் உண்டு ,